அமீரக TNTJ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

uae_1uae_1அமீரக த.த.ஜ. ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த 12/06/2009 அன்று நடைபெற்றது. அபுதாபி கேரளா சோசியல் சென்டரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அமீரக த.த.ஜ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஷேக் அவர்களின் துவக்க உரையுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பமானது. துவக்க உரையை தொடர்ந்து மண்டலங்களின் கடந்த மூன்று மாதங்களுக்கான செயல்பாட்டு அறிக்கைகளை அனைத்து மண்டல நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அமீரகத்தில் செய்யவேண்டிய அழைப்பு பணிகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமீரகத்தின் அனைத்து மண்டலங்களின் நிர்வாகிகள் மற்றும் தாயீகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துலில்லஹ்