அபுதாபி TNTJ நடத்தி வரும் வட்டியில்லா கடனுதவி திட்டம் கடந்த மூன்று ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடனுதவி!

DSC_0711DSC_0707DSC_0705DSC_0704தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் பேரியக்கம் தமிழகத்திலே மக்கள் பேராதரவுடன் பல சமுதாயபனிகளை சிறப்புடன் செய்து வருகின்றது அதனடிப்படையில் அதன் வழிமுறையை பின்பற்றி அதில் அங்கம் வகிக்கக்கூடிய அதன் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களால் இயன்ற சமுதாய நலப்பணிகளை அவ்வப்போது செய்து வருகின்றார்கள் அதிலும் குறிப்பாக இந்த சமுதாயத்தில் புரையோடிப்போயுள்ள வட்டி எனும் வன்கொடுமையிலிருந்து இந்த சமுதாயம் விழிப்புணர்வு ஏற்பட்டு விடுபட வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அல்லாஹ்வின் மாபெரும் உதவியுடன் தொடர்ந்து கடந்த ஒன்பது வருடங்களாய் அல்லாஹ்விற்காக அழகிய கடன் எனும் வட்டியில்லா கடன் மற்றும் சேமிப்பு திட்டத்தினை அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தில் நிர்வாக பொறுப்பில் அங்கம் வகிக்ககூடிய சகோதரர்கள் பஜூலுல்லாஹ் மற்றும் ஷேக்முஹம்மது ஆகிய இருவரும் இணைந்து இத் திட்டத்தினை நிர்வகித்து வருகின்றார்கள்

இத் திட்டத்தின் கடந்த மூன்று வருடங்களுக்கான செயல் திட்டத்தை அதன் உறுப்பினர்களிடம் அறிவித்து அவர்களின் சேமிப்பு தொகையினை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த 31.12.2009 வியழன் இரவு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் நடத்தப்பட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அபுதாபி மண்டல தலைவர் முஹம்மதுஷேக் அவர்கள் நிகழ்ச்சியினை அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமீரக ஒருங்கினைப்பாளர் சகோதரர் ஹாமின்இபுராஹீம் அவர்கள் அல்லாஹ்விற்காக அழகிய கடன் என்ற தலைப்பில் இம்மைக்காக பாடுபடும் நாம் நிரந்தர வாழ்வான மறுமை வாழ்விற்கு சேர்த்து வைக்க வேண்டியவை என்ன? என்ற செய்திகளை அவர்களின் உரையில் அழகாக குறிப்பிட்டார்கள்

பிறகு 2007 – 2009 ஆகிய கடந்த மூன்று வருடத்திற்கான செயல் திட்டங்கள் வாசிக்கப்பட்டது அதன் விபரம்

• இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மொத்த உறுப்பிணர்கள் 116 நபர்கள்
• உறுப்பினர்களுக்கு கடனாய் கொடுத்த மொத்த தொகை திர்ஹம் 8இ11இ100 – 00
• உறுப்பினரல்லாதவருக்கு கடனாய் கொடுத்த மொத்த தொகை திர்ஹம் 1இ13இ600 – 00
மொத்த கடன் தொகை இந்திய ரூபாய்க்கு நிகரான தொகை 1 கோடியே 17 லட்சம்
• சேமிப்பு தொகையாக உறுப்பினர் ஒருவர் திரும்ப பெற்றது ரூபாய் 1இ25000-00

மேலும் அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைந்து செய்த இலவச கல்வி உதவி

• ஆளஉ இரண்டாம் ஆண்டு பயிலும் சிதம்பரம் மாணவருக்கு ரூபாய் 5000 ஆயிரம் இலவசமாய் வழங்கப்பட்டது

• பாலிடெக்னிக் பயிலும் சிதம்பரம் மாணவர் ஒருவருக்கு ரூபாய் 3000 ஆயிரம் மதிப்பிலான புதிய சைக்கில் ஒன்று இலவசமாய் வழங்கப்பட்டது

இவையனைத்தும் முற்றிலும் இலவசமாக அல்லாஹ்வின் திருபொருத்தம் ஒன்றை மட்டும் எதிர்பார்த்த நிலையில் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2010 – 2012 ஆகிய மூன்றாண்டுகளுக்கான புதிய வட்டியில்லா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் இத்திட்டத்தின் மூலமாக வட்டி எனும் வன்கொடுமையில் இருந்து பல சகோதரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் உறுப்பினரல்லாத பல சகோதரர்களுக்கும் அவர்கள் வட்டியில் வீழாமல் தடுப்பதற்க்காக ஏராளமான கடன்உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாயத்திற்க்கு மிகவும் அவசியமான இத்திட்டத்தினை வளைகுடா மற்றும் தாயகத்தில் உள்ள நம் சகோதரர்களும் துவக்கி வட்டியில்லா சமுதாயமாக நம் சமுதாயத்தினை மாற்ற ஒவ்வொரு கொள்கை சகோதரனும் முன் வர வேண்டும்.