அபுதாபி சுவேஹான் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அபுதாபி மண்டலத்தின் ஒன்பதவது கிளையாக சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுவேஹான் பகுதியில் புதிய கிளை கடந்த 06-05-10 வியாழக் கிழமை அன்று இரவு 930 மணிக்கு தொடங்கபட்டது.

அபுதாபி மண்டல தலைவர் சகோ முஹம்மது ஷேக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சிக்கு முஸ்ஸஃபா கிளை தலைவர் புளியங்குடி முஹம்மது கனி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

முதலில் இறையச்சம் என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ முஹம்மது ஷேக் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் மாதம் வியழக்கிழமை தோறும் இஷா தொழகைக்கு பிறகு மார்க்கச் சொற்பொழிவு நடத்துவதெனவும், மக்கள் இருப்பிடம் சென்று மார்க்க பிரச்சாரம் செய்வதனவும், வாராந்திர துண்டு பிரசுரம் வினியோகம் செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது