அபுதாபி எலக்ட்ரா ரோட்டில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில்  எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள அல் இபுராஹீமீ ரெஸ்டரான்ட் பில்டிங் 13-வது மாடியில் 1303-வது ஃபிளாட்டில் கடந்த 13-05-10 அன்று வியழாக் கிழமை  வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் அப்துஸ் சலாம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மரணம் ஒரு சந்திப்பு என்ற தலைப்பில் அபுதாபி மண்டல தஃவா அணிச் செயலாளர் சகோ முஹம்மது கலில் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.