கடந்த 06.09.2010 அன்று அபுதாபி அல் ருவைஸ் எம்கோ கேம்ப் பள்ளிவாசலில் அபுதாபி TNTJ சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக் கூட்டத்தில் தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த சகோதரர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு மறுமையில் வெற்றி பெறுபவர்கள் யார்? எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
உரையின் இறுதியில் மார்க்க சம்மந்தமான மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் அல் ருவைஸ் பகுதியில் வசூலான ஃபித்ரா தொகையை அபுதாபி மண்டல தலைவர் சகோதரர் முஹம்மது ஷைக் அவர்களிடம் அபுதாபி அல் ருவைஸ் எம்கோ கேம்ப் பள்ளிவாசல் இமாம் அவர்கள் ஒப்படைத்தார்கள்.