அதிராம்பட்டிணத்தில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் கடந்த 24.04.2010 அன்று  மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலாவதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர், மௌலவி யாசிர் அரஃபாத் இம்தாதி அவர்கள் ‘ஒரிறைக் கொள்கையும், சமுதாய ஒற்றுமையும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள்’இம்மையும், மறுமையும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ‘உணரப்படாத தீமைகள்’என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் பெண்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.