அடியக்கமங்கலம் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 12-6-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் D.செய்யது அஹமது அவர்கள்,”கல்வி எங்கே?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அதன் பின் ஹாஜா மைதீன் அவர்கள் “இணைவைத்தல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதனை தொடர்ந்து A.அப்துல் ஹமீது,மஹ்ளரி அவர்கள் “மார்க்கம் அறியாத மங்கையர்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் A.அப்துல் ஹமீது,M.I.S.C.,H.D.C.A. அவர்கள் “அன்சாரி தோழர்களும் அறக்கட்டளை நிர்வாகிகளும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அவர்களின் உரையை தொடர்ந்து மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல் லுஹா ரஹ்மானி, அவர்க்ள் “தடம்புரலும் தவ்ஹீத்வாதிகள்?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

இந்த உரைக்கு இடையில்அடவங்குடியை சேர்ந்த மாற்று மத சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தழுவினார்.  அல்ஹம்துலில்லாஹ்!

பின்னர் கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.